கூகுள் டாக்ஸின் (google DOC) வீடியோ வசதி
கட்டணம்
எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ்
அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர் கூகுள் டாக்ஸ்
கணக்கில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது.
இதில்
டாக்குமெண்ட்களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் கோப்புகளை வடிவமைத்துப்
பயன்படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற
அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.
அது
மட்டுமின்றி நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அடுத்தவர்களும் பார்க்கலாம்,
திருத்தங்களை மேற்கொள்ளலாம் என எண்ணினால் அதற்கான அனுமதியை வழங்கும்
வசதியையும் கூகுள் டாக்ஸ் தருகிறது.
மேலே சொல்லப்பட்ட கோப்புகளுடன்,
வீடியோ கோப்புகளையும் கூகுள் டாக்ஸ் ஆபீஸ் தொகுப்பில் பதிந்து வைத்துப்
பயன்படுத்தலாம். வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திட யு-ட்யூப், டெய்லி
மோஷன் அல்லது பேஸ்புக் போன்ற தளங்கள் இருந்தாலும், கூகுள் டாக்ஸ்
தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது.
கூகுள்
டாக்ஸ் தொகுப்பில் வீடீயோ கோப்புகளை எப்படி பதிவேற்றம் செய்வது மற்றும்
அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்
அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலில் கூகுள்
டாக்ஸ் சென்று உங்கள் கூகுள் கணக்கு பதிவுத் தகவல்கள் மூலம் லொகின்
செய்திடவும். டாக்ஸ் தளம் கிடைத்தவுடன், புதிதாக இருக்கும் பதிவேற்ற
பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் கோப்புகளை பதிவேற்றம் செய்திட பைல்
டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இப்போது உங்கள் டெஸ்க்டொப் அல்லது வேறு
கோப்பறையில் இருக்கும் வீடியோ கோப்பை அப்படியே இழுத்து வந்து இந்த “File
upload” பகுதியில் விட்டுவிடலாம். இவ்வாறு நீங்கள் பதிவேற்றம் செய்திட
விரும்பும் அனைத்து வீடியோ கோப்புகளையும் இழுத்துவிட்டவுடன், Start upload
என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இதற்கு முன் நீங்கள் இந்த வீடியோ
கோப்புகளைக் குறிப்பிட்ட கோப்பறையில் சேவ் செய்திட விரும்பலாம்.
குறிப்பிட்ட ஒரு கோப்பறையைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder
பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் விரும்பும் கோப்பறையைத்
தேர்ந்தெடுக்கவும்.
வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்யப்படுகையில்,
பிரவுசரை மூடக்கூடாது. ஆனால், பிரவுசர் மூலம் வேறு வேலைகளில் ஈடுபடலாம்,
இணைய தளங்களுக்குச் செல்லலாம், மின்னஞ்சல்களை சரிபார்த்து அவற்றிற்குப்
பதில் அளிக்கலாம், கணணியில் வேறு பணிகளைத் தொடரலாம். வீடியோ கோப்புகள்
அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், கீழ்க்காணும் செய்தி
உங்களுக்குக் காட்டப்படும்.
Congratulations, you have successfully
uploaded one video clip to your Google Docs account. To upload more
videos, simply click the Upload more files button.
இனி உங்கள்
கூகுள் டாக்ஸ் கணக்கு மூலம் இந்த கோப்புகளை எப்படிப் பார்ப்பது மற்றும்
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.
வீடியோ
கோப்புகளை காண கூகுள் டாக்ஸ் சென்று, All documents என்பதில் கிளிக்
செய்திடவும். பின்னர் அங்கு காட்டப்படும் டாகுமெண்ட்ஸ் பட்டியல் வரிசையில்
நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ கோப்பு மீது கிளிக் செய்திடவும்.
குறிப்பிட்ட
வீடியோ பிரவுசரின் புதிய விண்டோ ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள்
காணலாம், உங்கள் கணணிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து
கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம்.
கூகுள் டாக்ஸ்
தளத்தில் உள்ள வீடியோ பிளேயர், யு-ட்யூப் வீடியோ பிளேயர் போலவே காட்சி
அளிக்கும். இங்கு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவேற்றம்
செய்யப்பட்ட வீடியோ கோப்புகளை, உங்கள் கூகுள் டாக்ஸ் கணக்கு மூலமாகத்தான்
பார்க்க முடியும்.
யு-ட்யூப் மூலம் பார்க்க முடியாது. உங்கள்
நண்பர்களுடன் இந்த வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என
எண்ணினால், Sharing settings என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு
கிடைக்கும் இடத்தில் உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் மின்னஞ்சல்
முகவரியினை அமைக்கவும். ஆனால் வீடியோ கோப்பு பிரைவேட்டாக உங்களுக்கு
மட்டுமே வேண்டும் எனில், Private என்ற பாக்ஸில் டிக் அடையாளம்
ஏற்படுத்தவும்.
நீங்கள் இந்த வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள,
யாருடைய மின்னஞ்சல் முகவரிகளை அமைத்துள்ளீர்களோ, அவர்களுக்கு ஜிமெயில்
தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு மெயிலாக அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட
வீடியோ கோப்புக்கான லிங்க் அனுப்பப்படும்.
அவர்கள் தங்களுடைய கூகுள்
கணக்கு மூலம் சென்று, அந்த லிங்க்கில் உள்ள வீடியோ கோப்புகளைப்
பார்வையிடலாம். தங்கள் கணக்கு மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூகுள்
டாக்ஸ் MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ
போர்மட்களை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த வீடியோ
பைல்களையும் உடனுடக்குடன், கூகுள் அக்கவுண்ட்ஸ் சென்று அனுப்பலாம். வீடியோ
கன்வர்டர் எல்லாம் தேவை இருக்காது.
கூகுள் டாக்ஸ் வீடியோ கோப்புகள்
அதிக பட்சம் 1920 X 1080 என்ற ரெசல்யூசன் திறனுடன் இருக்கலாம். வீடியோ
கோப்பின் அதிக பட்ச அளவு ஒரு ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையில்
நம் வீடியோ கோப்புகளை பதிந்து வைத்துப் பாதுகாக்க கூகுள் டாக்ஸ் சிறந்த
சாதனமாக உள்ளது