Educomp

Educomp
Educomp

Tuesday, 29 November 2011

நிலநடுக்கம்: இலவசத் தகவல் கொடுக்கும் யு.எஸ். புவியியல் ஆய்வு மையம்

நிலநடுக்கம்: இலவசத் தகவல் கொடுக்கும் யு.எஸ். புவியியல் ஆய்வு மையம்


உலகம் முழுவதும் ஏற்படும் நில நடுக்க சம்பவங்களை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கண்காணித்து வருகின்றது. உங்கள் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிடங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.
உலகில் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தின்போது பெருமளவில் மடிகின்றனர். நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிந்து மனித உயிர்களை காப்பாற்ற அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இலவமாக மின் அஞ்சல் மூலம் தகவல்களை கொடுத்து வருகின்றது.

இந்த அரிய தகவலை பெற https://sslearthquake.usgs.gov/ens/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று Subcribe செய்த பின்னர் மாதிரி மின்னஞ்சல் நமக்கு வந்து சேரும்.
அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகுளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்பு சேமித்து விடவும். இனி மேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் மின்அஞ்சல் மூலம் கிடைக்கின்றது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கான தகவல் கிடைக்க சுமார் 20 முதல் 30 நிமிடம் வரை ஆகின்றது.
இந்த தகவல் முழுக்க முழுக்க உண்மையானதாகவும், இதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவகை கிடைப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆபத்தான நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றுக்கள்.

கூகுள் டாக்ஸின் (google DOC) வீடியோ வசதி

கூகுள் டாக்ஸின் (google DOC) வீடியோ வசதி


கட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஆபீஸ் அப்ளிகேஷன் கூகுள் டாக்ஸ் ஆகும். சில வாரங்களுக்கு முன்னர் கூகுள் டாக்ஸ் கணக்கில் என்ன என்ன வசதிகளை மேற்கொள்ளலாம் என்று காட்டப்பட்டது.
இதில் டாக்குமெண்ட்களை உருவாக்கலாம், பிரசன்டேஷன் கோப்புகளை வடிவமைத்துப் பயன்படுத்தலாம். மேலும் ஸ்ப்ரெட்ஷீட், படங்கள், சார்ட்கள் என இது போன்ற அனைத்தையும் உருவாக்கிப் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

அது மட்டுமின்றி நீங்கள் உருவாக்கும் கோப்புகளை அடுத்தவர்களும் பார்க்கலாம், திருத்தங்களை மேற்கொள்ளலாம் என எண்ணினால் அதற்கான அனுமதியை வழங்கும் வசதியையும் கூகுள் டாக்ஸ் தருகிறது.
மேலே சொல்லப்பட்ட கோப்புகளுடன், வீடியோ கோப்புகளையும் கூகுள் டாக்ஸ் ஆபீஸ் தொகுப்பில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திட யு-ட்யூப், டெய்லி மோஷன் அல்லது பேஸ்புக் போன்ற தளங்கள் இருந்தாலும், கூகுள் டாக்ஸ் தொகுப்பின் மூலம் இவற்றைக் கையாள்வது சில கூடுதல் வசதிகளைத் தருகிறது.
கூகுள் டாக்ஸ் தொகுப்பில் வீடீயோ கோப்புகளை எப்படி பதிவேற்றம் செய்வது மற்றும் அவற்றை பகிர்ந்து கொண்டு பயன்படுத்த, நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அனுமதி எப்படி வழங்குவது என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலில் கூகுள் டாக்ஸ் சென்று உங்கள் கூகுள் கணக்கு பதிவுத் தகவல்கள் மூலம் லொகின் செய்திடவும். டாக்ஸ் தளம் கிடைத்தவுடன், புதிதாக இருக்கும் பதிவேற்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் கோப்புகளை பதிவேற்றம் செய்திட பைல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இப்போது உங்கள் டெஸ்க்டொப் அல்லது வேறு கோப்பறையில் இருக்கும் வீடியோ கோப்பை அப்படியே இழுத்து வந்து இந்த “File upload” பகுதியில் விட்டுவிடலாம். இவ்வாறு நீங்கள் பதிவேற்றம் செய்திட விரும்பும் அனைத்து வீடியோ கோப்புகளையும் இழுத்துவிட்டவுடன், Start upload என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இதற்கு முன் நீங்கள் இந்த வீடியோ கோப்புகளைக் குறிப்பிட்ட கோப்பறையில் சேவ் செய்திட விரும்பலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பறையைத் தேர்ந்தெடுத்து அமைக்க, Destination folder பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் விரும்பும் கோப்பறையைத் தேர்ந்தெடுக்கவும்.
வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்யப்படுகையில், பிரவுசரை மூடக்கூடாது. ஆனால், பிரவுசர் மூலம் வேறு வேலைகளில் ஈடுபடலாம், இணைய தளங்களுக்குச் செல்லலாம், மின்னஞ்சல்களை சரிபார்த்து அவற்றிற்குப் பதில் அளிக்கலாம், கணணியில் வேறு பணிகளைத் தொடரலாம். வீடியோ கோப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், கீழ்க்காணும் செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.
Congratulations, you have successfully uploaded one video clip to your Google Docs account. To upload more videos, simply click the Upload more files button.
இனி உங்கள் கூகுள் டாக்ஸ் கணக்கு மூலம் இந்த கோப்புகளை எப்படிப் பார்ப்பது மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கலாம்.
வீடியோ கோப்புகளை காண கூகுள் டாக்ஸ் சென்று, All documents என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் அங்கு காட்டப்படும் டாகுமெண்ட்ஸ் பட்டியல் வரிசையில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோ கோப்பு மீது கிளிக் செய்திடவும்.
குறிப்பிட்ட வீடியோ பிரவுசரின் புதிய விண்டோ ஒன்றில் இயங்கத் தொடங்கும். இதனை நீங்கள் காணலாம், உங்கள் கணணிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொண்டால், அதனை இணைய இணைப்பின்றியே பார்க்கலாம்.
கூகுள் டாக்ஸ் தளத்தில் உள்ள வீடியோ பிளேயர், யு-ட்யூப் வீடியோ பிளேயர் போலவே காட்சி அளிக்கும். இங்கு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ கோப்புகளை, உங்கள் கூகுள் டாக்ஸ் கணக்கு மூலமாகத்தான் பார்க்க முடியும்.
யு-ட்யூப் மூலம் பார்க்க முடியாது. உங்கள் நண்பர்களுடன் இந்த வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணினால், Sharing settings என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் இடத்தில் உங்கள் நண்பர் மற்றும் உறவினரின் மின்னஞ்சல் முகவரியினை அமைக்கவும். ஆனால் வீடியோ கோப்பு பிரைவேட்டாக உங்களுக்கு மட்டுமே வேண்டும் எனில், Private என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
நீங்கள் இந்த வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள, யாருடைய மின்னஞ்சல் முகவரிகளை அமைத்துள்ளீர்களோ, அவர்களுக்கு ஜிமெயில் தளத்திலிருந்து ஒரு அறிவிப்பு மெயிலாக அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட வீடியோ கோப்புக்கான லிங்க் அனுப்பப்படும்.
அவர்கள் தங்களுடைய கூகுள் கணக்கு மூலம் சென்று, அந்த லிங்க்கில் உள்ள வீடியோ கோப்புகளைப் பார்வையிடலாம். தங்கள் கணக்கு மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூகுள் டாக்ஸ் MP4, FLV, MPEG, AVI, WMV, 3GP போன்ற பெரும்பாலான வீடியோ போர்மட்களை இயக்குகிறது. எனவே உங்கள் மொபைல் போனில் நீங்கள் எடுத்த வீடியோ பைல்களையும் உடனுடக்குடன், கூகுள் அக்கவுண்ட்ஸ் சென்று அனுப்பலாம். வீடியோ கன்வர்டர் எல்லாம் தேவை இருக்காது.
கூகுள் டாக்ஸ் வீடியோ கோப்புகள் அதிக பட்சம் 1920 X 1080 என்ற ரெசல்யூசன் திறனுடன் இருக்கலாம். வீடியோ கோப்பின் அதிக பட்ச அளவு ஒரு ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த வகையில் நம் வீடியோ கோப்புகளை பதிந்து வைத்துப் பாதுகாக்க கூகுள் டாக்ஸ் சிறந்த சாதனமாக உள்ளது

Monday, 28 November 2011

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது: நாசா விஞ்ஞானிகள் தகவல்


வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது: நாசா விஞ்ஞானிகள் தகவல்




வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன்.






வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.
அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர். இந்த நிலையில் வியாழன் கிரகத்தில் உள்ள யூரோப்பா என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. யூரோப்பாவில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன.
அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார்
.

Sunday, 27 November 2011

பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்


பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்


நெடு நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி பணி செய்தால், அதிக வலி ஏற்படாது.குதிக்கால் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும், உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.
கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால் முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்க இவை உதவும்.
உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்சினை ஏற்படாது. நாம் கடினமான வேலைகளைச் செய்யும் போது தசை பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.
மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.
குதிகால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு செய்து வரவும்.நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்து விட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20-30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி குறையும்.
வலி குறைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். உட்காரும் போதும் நிற்கும் போதும் தூங்கும் போதும் சரியான நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.குனிந்து எந்த ஒரு அதிக சுமையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம். மாறாக முழுங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும்.
நீண்ட தூரம் கார்களை ஓட்டுவோர், விட்டு விட்டு ஓய்வுக்கு பின் பயணம் செய்வது நல்லது. ரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும்.
ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.இப்படியே மாறி மாறி 10 முறை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு கிடைக்கும்.

எப்போதெல்லாம் கணவன் மனைவியிடம் பொய் சொல்கிறார் என்று தெரியுமா ?


எப்போதெல்லாம் கணவன் மனைவியிடம் பொய் சொல்கிறார் என்று தெரியுமா ?



கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள்.
அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம்.
நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.
மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம்.
அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே.
நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.
ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள்.


என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள்.
அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை.

ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள்.


உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.
மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.

TOP TEN WEBSITES


இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள் 2011



2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்.
10. iTunes


பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$ இந்தியமதிப்பில் Rs. 3130 ரூபாய். ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.
9. Paypal

ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும். இந்த தளத்தின் உரிமையாளர் Mark schroeder என்பவர்.
7. AOL

இந்த தளம் இணையத்தில் பல்வேறு தலைப்புகளில் லேட்டஸ்ட் செய்திகளை பகிரும் தளமாகும். அலேக்சாவில் 61 வது இடத்தை பிடித்துள்ள தளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் எரிக பிரின்ஸ் என்பவர். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு $3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.

இதுவும் ஆன்லைனில் செய்தி பகிரும் தளமாகும். இதன் உரிமையாளர் மார்சல் வாஸ் என்பவர். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்று தருகிறது.
5. Yahoo

இந்த தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. அலேக்சாவில் 4 இடத்தில் உள்ளது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.
4. ebay

Amazon தளத்தை போன்று இதுவும் ஆன்லைனி பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த தளத்தின் உரிமையாளர் Pierre Omidyar என்பவர். வினாடிக்கு 276.56$ ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது.

அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.
2. Google

அப்பாடா நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த தளம் வந்துவிட்டது. இதனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இணையத்தின் நாடித்துடிப்பு இந்த தளம் ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் Rs. 38971(இப்பவே கண்ண கட்டுதே) ஆகும்.
1. Amazon
வெற்றிகரமாக முதல் இடத்திற்கு வந்தாச்சு. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து , அலெக்சா மதிப்பு அனைத்தும் குறைவு தான் ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.
என்னடா ஏதோ மிஸ் ஆகுதேன்னு பாக்குறீங்களா!! பெரும்பாலானவர்களின் விருப்பமான அலேக்சாவில் 2 இடத்தில் உள்ள பேஸ்புக் தளத்தை பட்டியலில் காணவில்லையே என யோசிக்கிறீங்களா?
கூகுளையே ஆட்டி வைத்த பேஸ்புக் தளம் இல்லையே என்பது எல்லோருக்கும் வரக்கூடிய சந்தேகம் தான் ஆனால் அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் 16 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த தளத்தின் ஆண்டு வருமானம் $1,000,000,000 வினாடிக்கு $31.69 வருமானம் ஈட்டுகிறது.